மார்ச்-18ல் திரைக்கு வருகிறது ‘டார்லிங்-2’..!

191

darling-2 2402

இப்போதெல்லாம் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அதன் தொடர்ச்சியான கதையாகவோ, அதே நடிகர்கள் தான் நடிக்கவேண்டும் என்கிற கட்டாயமோ இல்லை.. அந்தவகையில் ஹிட் படமான ‘டார்லிங்’கின் முந்தைய பாகத்தின் கதைக்கருவை ஒட்டிய கதையாக ‘டார்லிங்-2’ உருவாகியிருக்கிறது. புதுமுகம் ரமீஸ்ராஜா ஹீரோவாக நடிக்க வில்லனாக நடித்திருக்கிறார் மெட்ராஸ் கலையரசன்..

பல குறும்படங்களை இயக்கிய சதீஷ் சந்திரசேகர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஐந்து இளைஞர்கள் காட்டுக்குள் இருக்கும் ரிசார்ட் ஒன்றிற்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்கள். அந்த ஐந்து பேரில் ஒருவர் தான் பேய்.. ஆனால் யார் பேய் என சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாது.. இதை வைத்து த்ரில்லிங்காக கதை பண்ணியிருக்கிறார்களாம். ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக மார்ச்-18ல் ரசிகர்களை மிரட்ட திரைக்கு வருகிறது இந்த ‘டார்லிங்-2‘

Comments are closed.