சிம்புவுக்கு எதிராக டேனியலை களம் இறக்கியுள்ள கௌதம் மேனன்..?

253

simbu vs daniel-balaji
கௌதம் மேனன் டைரக்சனில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒரு முக்கிய தோற்றத்தில் நடித்த அவரது ஆஸ்தான நடிகரான டேனியல் பாலாஜி, தற்போது மீண்டும் கௌதமின் இயக்கத்தில், சிம்பு நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார்.. ‘காக்க காக்க’ படத்தில் இருந்து தொடரும் இவர்களது நட்பு பயணத்தில் இது நான்காவது படம்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் இந்தப்படத்திற்கு இரண்டு விதமாக டப்பிங் பேசியுள்ளார் டேனியல் பாலாஜி. அதாவது தமிழ் வெர்ஷனுக்கு இந்தியும் தெலுங்கும், தெலுங்கு வெர்ஷனுக்கு இந்தியும் தமிழும் என டப்பிங் பேசியுள்ளாராம்.. ஆக தமிழ்ப்படத்தில் தமிழ் பேசத்தெரியாத வில்லனாக நடித்திருக்கிறார் டேனியல் பாலாஜி.

Comments are closed.