‘டமார்.. படார்’ – வருகிறார் ஏ.சி.பி பவுரன்

70

மலையாளத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டர்களை சாசனம் எழுதிக்கொடுத்ததுபோல இப்போது அதிகமான படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் போடுவது பிருத்விராஜ்தான். அதற்கேற்ற மாதிரி இவருக்கும் போலீஸ் கேரக்டர் கச்சிதமாக பொருந்துகிறது. இல்லையென்றால் 14 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்க முடியுமா?

கடந்த வருடத்தில் மட்டும் ‘மும்பை போலீஸ்’, ‘மெமோரிஸ்’ என இரண்டு படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ் இதுதவிர இந்தவருட ஆரம்பத்திலேயே ‘செவன்த் டே’ என்ற இன்னொரு படத்திலும் போலீஸ் டிபார்ட்மெண்ட்டிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட 42 வயது போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் பிருத்விராஜ்.

கொஞ்சம் இருங்கள்.. விஷயம் இத்துடன் முடியவில்லை. தற்போது லேட்டஸ்டாக ‘டமார் படார்’ என்கிற படத்தில் யூத்புல்லான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ். படத்தில் இவரது கேரக்டரின் பெயர் ஏ.சி.பி பவுரன்.. இது போலீஸ் அதிகாரியாக இவர் நடிக்கும் 15வது படம்

‘சாமி’ படத்தில் விக்ரம் சொல்வாரே “ஆறுச்சாமின்னு கோடில ஒருத்தனுக்குத்தான் பேர் வைப்பாங்க”ன்னு. அதே மாதிரி இந்தப்படத்தில் பிருத்விராஜும் “இந்த பேர்ல நான் ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருக்கேன்” என பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார். போதாதற்கு திருவனந்தபுரம் மலையாள பாஷையிலும் பேசியிருக்கிறார். வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெடிக்க இருக்கிறது இந்த ‘டமார்.. படார்..’

Comments are closed.