
கவுண்டமணியாக இருக்கட்டும்.. அல்லது வடிவேலுவாக இருக்கட்டும்.. அவ்வளவு ஏன் இப்போதைய சந்தானமாக கூட இருக்கட்டும். இவர்களது நகைச்சுவை நடிப்பபை வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்துவதில் இயக்குனர் சுந்தர்.சியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை..
கவுண்டமணி, வடிவேலு ஆகியோரின் லைப்டைம் ரெக்கார்டுகளை புரட்டினால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் சுந்தர்.சியின் படங்கள் இரண்டு இடம்பிடிக்கும்.. அதே பாணியில்தான் இன்றைய யூத் ட்ரெண்டில் இறங்கி அடிக்கும் வகையில் ‘கலகலப்பு’ படத்தில் இருந்து தொடர்ந்து சந்தானத்துடன் காமெடிக்கூட்டணி அமைத்து வருகிறார் சுந்தர்.சி.
தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை ஆகிய படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் முதல் காரணம் சந்தானத்தின் காமெடி தான். அதனால் தான் இவர்கள் கூட்டணி தற்போது விஷாலை வைத்து சுந்தர்.சி இயக்கிவரும் ‘ஆம்பள’ படத்திலும் தொடர்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள சுந்தர்.சி, அவர் மெயின் காமெடியனாக வருகிறாரா அல்லது கெஸ்ட் ரோலில் வருகிறாரா என்பது மட்டும் சஸ்பென்ஸ் என்கிறார்..
Comments are closed.