முடிந்தது முதல் ஷெட்யூல்.. மும்பை பறந்தார் ஸ்ருதி..!

165

இயக்குனர் ஹரியின் படங்களில் காட்சிகள் வேகவேகமாக பறக்கும்.. ஹீரோக்கள் எல்லா விஷயங்களையும் தெளிவாக திட்டமிடுவார்கள். இதெல்லாம் எங்கிருந்து வந்தது..? ஹரியின் செயல்பாடுகள் தான் படங்களின் ஹீரோக்களிடமும் எதிரொலிக்கின்றன.

அந்த வகையில் விஷாலை வைத்து தற்போது ஹரி இயக்கிவரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பும் இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கு. ஆனால் அதற்குள் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. காரணம் ஹரியின் திட்டமிடுதலும் வேகமும் தான்.

இதை இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதோடு அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் அந்த இடைவெளிக்குள் தான் தற்போது நடித்துவரும் இந்திப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பைக்கும் பறந்துவிட்டார்.

Comments are closed.