
பிரசாந்த் தற்போது நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் ‘சாஹசம்’.. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கிவருகிறார் பிரசாந்தின் தந்தையான தியாகராஜன்.. காரணம் தனது மகனின் ரீ என்ட்ரி படம் மிகப்பெரிய வெறியை அடைந்தால் பிரசாந்தின் அடுத்த இன்னிங்க்ஸ் மீண்டும் நல்லவிதமாக தொடரும் என்பது அவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனாலும் பிரசாந்திற்கு சோதனை காத்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.. காரணம் ‘சாஹசம்’ படம் வெளியாகும் அதே நாளில் தான் ஜெயம் ரவியின் ‘மிருதன்’ படமும் வெற்றிமாறனின் ‘விசாரணை’ படமும் வெளியாக இருக்கின்றன. அதேசமயம் அதற்கு முதல் வரமான ஜன-29ல் ‘அரண்மனை-2’ மற்றும் மாதவனின் ‘இறுதிச்சுற்று’ம் வெளியாகின்றன.. ஆக பிரசாந்த் கடும்போட்டியை சமாளிக்கவேண்டும் என்பது மட்டும் உறுதி.
Comments are closed.