காட்டிலாகா அதிகாரியாக கலக்க வரும் சோனியா அகர்வால்..!

192

chaaya

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா அகர்வால் நடிக்க வருகிறார் என்றே சொல்லவேண்டும்.. அதனாலோ என்னவோ கொஞ்சம் வெயிட்டான ரோலான வன இலாகா அதிகாரியாக ‘சாயா’ என்கிற படத்தில் நடித்துள்ளார். சாயா என்றால் உடனே ‘டீ’ என அர்த்தம் கொள்ளவேண்டாம். சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்றும் பொருள் இருக்கிறது. அந்த சக்தி நிறைந்த வார்த்தைக்கும் ஆத்ம சக்திக்கும் நல்ல நோக்கத்திற்குமான தொடர்பு இருப்பதால் படத்திற்கு சாயா என்று பெயரிட்டுள்ளனர்.

காட்டிற்குள் நடக்கும் கடுமையான சண்டைக் காட்சிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் சோனியா அகர்வால். வன இலாகா அதிகாரியாக வரும் சோனியா அகர்வாலுக்கு இப்படம் ஒரு மாறுபட்ட இமேஜை உருவாக்கித் தரும். தவிர, அவருக்கு ஆக்சன் ரூட் போட்டுக்கொடுக்கும் படமாகவும் உருவாகியுள்ளது “சாயா”.

இதில் சந்தோஷ் என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். அவருடன் டூரிங் டாக்கீஸ் படத்தின் நாயகியாக காயத்திரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்த கௌதமி செளத்ரி நடிக்கிறார். இதுவரை எடுக்கப்பட்ட பேய்ப் படங்களை போல ஆவிகளைப் பற்றி மட்டும் பேசாமல், இந்தப்படம் புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும். ஆத்மாக்களின் நல்ல நோக்கம் இந்த சமுதாயத்திற்கும் மாணவர்களுக்குமான தேவையை நிறைவேற்றும் புதுமையான திரைக்கதையுடன் படம் பயணிக்கும் என்கிறார் இயக்குனர் வி.எஸ்.பழனிவேல்.

Comments are closed.