
3டியில் உருவாகிய ‘அம்புலி’ படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் ‘ஆரோ-3டி’யில் உருவாக்கியிருக்கும் படம் தான் ‘ஆ’. கடந்த வாரம் வெளியான இந்தப்படம் வெற்றிகரமாக ஓடுவதை தொடர்ந்து தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளார்கள்.
ஒரு தயாரிப்பாளருடன் இரண்டாவது படத்தில் இணைந்து பணிபுரிவது ஒருவகையில் ஆச்சர்யம் என்றால் அதை வெற்றிப்படமாக ஆக்குவது அதைவிட ஆச்சர்யமான விஷயம் தான்.. அதை சாதித்துக்காட்டியுள்ளனர் ‘ஆ’ படத்தின் இயக்குனர்கள் ஹரியும் ஹரீஷ் சங்கரும்..
இன்னொரு படத்திலும் இணையவேண்டும் என்பது ஏற்கனவே அம்புலி’ படம் எடுத்தபோதே அதன் தயாரிப்பாளரும் இயக்குனர்களும் முடிவு பண்ணிய விஷயம் தான். இன்று நடைபெற்ற இந்தப்படத்தின் சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளரின் முகத்தில் தெரிந்த சந்தோசம் இந்த கூட்டணி அடுத்த படத்திலும் தொடரும் என்பதை சொல்லாமல் சொல்லியது.
Comments are closed.