
சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு நேற்று இரவு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக தாத்தா ஆகியுள்ளார் ரஜினி. ஏற்கனவே மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் வாரிசுகள் மட்டுமே இருக்கும் வீட்டில் பேரக்குழந்தைகளாக ஆண் வாரிசுகள் தான் பிறப்பார்கள் என ஒரு ஐதீகம் சொல்கிறது. அதன்படி இரண்டு பெண்பிள்ளைகளுக்கு தந்தையான ரஜினியின் மகள்களுக்கு தொடர்ந்து ஆண்குழந்தைகளாக பிறப்பது அந்த ஐதீகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. பெண்ணோ, ஆணோ ரஜினி இப்போ ஹேப்பி அண்ணாச்சி..!
Comments are closed.