பூமராங்’ படத்திற்கு இந்துஜா சரியான தேர்வு” ; இயக்குனர் கண்ணன் பெருமிதம்..!

231

indhuja

இயக்குனர் ஆர் கண்ணன் டைரக்சனில் ஆக்‌ஷன் – த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘பூமராங்’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் இசை, டிரெய்லர் மற்றும் உலக அளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது..

இயக்குனர் கண்ணனை பொறுத்தவரை நல்ல கதை மற்றும் மேக்கிங்கில் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வுதான் அவரது ஸ்பெஷாலிட்டியே. அதர்வா மற்றும் மேகா ஆகாஷ் இருவரையும் தவிர ‘மேயாத மான்’ புகழ் இந்துஜாவும் இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்..

அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது, “அதர்வா மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் ‘பூமராங்’ ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உடனடி தேர்வாக அமைந்தார். .

“ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா. அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்கிறார் இயக்குனர் கண்ணன்.

Comments are closed.