ஆகஸ்ட் 3ல் ‘பூமராங்’ இசை வெளியீடு

184

இயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யரான இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வா மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் ‘பூமராங்’ படத்தை இயக்கி வருகிறார். இதுவரை பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்ட போதிலும், சமீபத்திய ‘அர்ஜுன் ரெட்டி’ ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் ரதனை இசையமைத்திருக்கிறார்.

“மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த ‘பூமராங்’ குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இயக்குனர் கண்ணன்.

Comments are closed.