“ஷங்கருக்கு ஒரு ராயல் சல்யூட்” – கலைப்புலி தாணு பரவசம்..!

222

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு ஈ.சி.ஆறில் கேரளா ஹவுசில் வைத்து பூஜை போடப்பட்டது. இந்தப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். துப்பாக்கியை விட நான்கு மடங்கு இந்தப்படம் இருக்கும் என கூறிய தாணு, இயக்குனர் ஷங்கருக்கு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

எதற்கு தெரியுமா.? இந்தப்படத்திற்கான கதையை கலைப்புலி தாணுவிடம் அட்லி சொல்லி முடித்தபோது பரவசமாகி போனார் தாணு. உடனே அட்லியின் குருவான ஷங்கருக்கு போன் போட்டு, “ஷங்கர்.. உன்னுடைய தலையாய சிஷ்யனா இந்த பையன் வருவான்… எழுதி வச்சுக்க.. பெஸ்ட் பையனை எனக்கு கொடுத்திருக்க ஷங்கர்.. அதுக்கு உனக்கு என்னோட ராயல் சல்யூட்” என சொல்லியிருக்கிறார். ஒரு குருவுக்கு இதைவிட பெருமை வேறு எதுவும் உண்டோ..?

Comments are closed.