ஜோடியை மாற்றினார் பிக்பாஸ் புகழ் மஹத்

195

ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராம்.சி இயக்கும் ரோம்-காம் திரைப்படத்தில், மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தேர்வு முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ரோம்-காம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மில்லயன் ரசிகர்களின் ஃபேவரைட்டான, மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரையும் இந்த படத்துக்குள் கொண்டு வருவதற்கு பின் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களையும் இயக்குனர் பகிர்ந்து கொள்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த திரைப்படம் வட சென்னை பையன் மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை சுற்றி நிகழும் கதை. அவர்கள் தங்கள் இயல்பு மற்றும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை நான் தேடிக் கொண்டிருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தபோது, மஹத்தின் இயல்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்வார் என்று உடனடியாக உணர்ந்தேன். அதே போலவே ஐஸ்வர்யா தத்தா, அவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

Comments are closed.