
குறும்பட இயக்குனர்களுக்கு புதிய பிளாட்பாரம் அமைத்து தரும் வகையிலும் நடிக்க வாய்ப்பு தேடி அலைபவர்களுக்கு உதவும் வகையிலும் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் stone bench என்கிற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். நேற்று சத்யம் தியேட்டரில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் துவக்க விழாவில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பல இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “இப்போது வாய்ப்பு தேடுபவர்களின் சிரமங்களை போக்கும் விதமாக கார்த்திக் சுப்புராஜ் இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளதை பாராட்டுகிறேன். நான் உதவி இயக்குனராக சேர விரும்பிய காலகட்டத்தில் பாரதிராஜா சாரின் ‘கிழக்கு சீமையிலே’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவரது உதவி இயக்குனரான ஜி.எம்.குமாரை காக்கா பிடித்து ஸ்பாட்டில் அறிவிக்கப்படாத அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்தேன்..
அதற்கடுத்து பாரதிராஜா சாரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் வரும் காரின் குறுக்கே விழுவேன்.. யோவ் யார்யா நீன்னு திட்டுவார். சார் உங்ககிட்ட அசிஸ்டென்ட்டா சேரணும் சார் அப்படின்னு கெஞ்சுவேன்.. இது என்னய்யா வம்பா போச்சு.. எங்கிட்ட ஏற்கனவே பத்து பேர் இருக்கான்.. வேணும்னா அதுல ஒருத்தன போட்டுத்தள்ளிட்டு வா.. அந்த இடத்துல உன்னை சேர்த்துக்கிறேன் என தலையில் அடித்துக்கொள்வார்..
சில சமயங்களில் அப்படி யாரையாவது போட்டுத்தள்ளிவிடலாமா என்றும் நினைத்தது கூட உண்டு. ஆனாலும் அவர் படம் இயக்கும் விதத்தை தூர இருந்தே பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்” என்று தான் வாய்ப்பு தேடிய கதையை கூற, பின்னால் பேசிய பாரதிராஜாவும் அதை ஆமோதித்து இன்னும் சில விஷயங்களை கூறி விழாவை கலகலப்பாக்கினார்
Comments are closed.