சமீபத்தில் வெளியான என்னோடு விளையாடு’ ட்ரெய்லரை பார்த்தபோது குதிரை பந்தயத்தை நுணுக்கமாக கையாண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.. பரத், கதிர், ராதாராவி, யோக் ஜேபி என படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் குதிரை ரேஸ் சம்பந்தப்பட்ட நபர்களாகவே இருக்கிறார்கள்.
படத்தை இயக்கியுள்ள அருண் கிருஷ்ணசுவாமி குதிரைப்பந்தயம் பற்றிய டீடெய்ல்கலை ஆங்காங்கே தெளித்துள்ளார். அதனால் படத்தின் சுவாரஸ்யத்திற்கு எந்த குறையும் இருக்காது என நம்பலாம். கிட்டத்தட்ட சரிவின் விளிம்புக்கே போய்விட்ட பரத்திற்கு இந்தப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்போம்.
Comments are closed.