“சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்குறதுதான்” இது பாக்யராஜ் பல இடங்களில் அடிக்கடி சொல்லியும், தானும் கடைபிடித்துவரும் தாரக மந்திரம். இந்த மனிதநேயத்தின் அடிப்படையில் தான், தங்களது வாழ்நாளின் கடைசி நாட்களில் இருக்கும் மூன்று சிறுவர்களின் கடைசி ஆசையை அறிந்து, அதை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் விஜய்.
சென்னையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இருந்தாலும் டாக்டர்கள் அந்த மூன்று பேரும் தங்களது நாட்களை எண்ணிககொண்டிருப்பதாக கூறிவிட்டனர்.. இதனை அறிந்த அந்த மூன்று சிறுவர்களும் அதற்குள் எப்படியாவது தங்கள் அபிமான நடிகரான விஜய்யை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற தங்களது கடைசி ஆசையை வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல் விஜய்யின் காதுகளுக்குப்போக, அந்த மூன்று சிறுவர்களையும் தனது இல்லத்திற்கு அழைத்துவர சொல்லியிருக்கிறார். சிறுவர்களை பற்றிய சோகம் மனதில் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர்களுடன் சில மணி நேரங்கள் சிரித்துப்பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். மேலும் அவர்கள் இன்னும் பல வருடங்கள் உயிருடன் வாழ பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
Comments are closed.