‘பெங்களூரு டேய்ஸ்’ – 3:3:1 கணக்குப்படி நஸ்ரியாவுக்கு முக்கியமான படம்

119


கடந்த 2012ல் மாறுபட்ட கதை அமைப்பில் எடுக்கப்பட்டு, நல்ல விமர்சனங்களும், பாராட்டுக்களும் பெற்ற மலையாளப் படம் ‘மஞ்சாடிக்குரு’. பிருத்விராஜும் பத்மபிரியாவும் நடித்த இந்தப்படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன்.

குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படிருந்த இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது அஞ்சலி மேனன் மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை நடிக்க வைத்து ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் நஸ்ரியா. 3:3:1 கணக்குப்படி நஸ்ரியாவுக்கு இது முக்கியமான படம். அதென்ன 3:3:1..? இதில் ஹீரோக்களான துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் இவர் நடிக்கும் மூன்றாவது படம். ஆனால் தனது வருங்கால கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் இதுதான் முதல் படம்.. இந்தப்படத்தில் நடிக்கும்போது தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

இவர் தவிர ‘மரியான்’ பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் என இன்னும் மூன்று ஹீரோயின்களும் உண்டு.

இந்தப்படத்தை தனது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் பக்கா கமர்ஷியல் படமாக இயக்கி இருக்கிறாராம் அஞ்சலி மேனன். மலையாள சினிமாவின் மெகாஹிட் படமான ‘ராஜமாணிக்கம்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

Comments are closed.