ஹ்ரித்திக் ரோஷன், காத்ரீனா கைப் இணைந்து கலக்கவிருக்கும் புதிய படம் தான் ‘பேங் பேங்’.. இதில் சாதாரண பக்கத்து வீட்டு பெண்ணாக வலம் வரும் காத்ரீனா, ஒருகட்டத்தில் அதற்கு நேர்மாறாக எப்படி அதிரடி பெண்ணாக மாறுகிறார் என்பதை மிகவும் விறுவிறுப்பாக சித்தரித்துள்ளாராம் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த்.
படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகள் காத்ரீனாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரும் ஸ்டண்ட் காட்சிகளில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு அசத்தியுள்ளாராம். இந்தப்படத்தில் காத்ரீனாவின் புதிய முகத்தை பார்க்கலாம் என்கிறார் படத்தின் இயக்குனர் சித்தார்த். வரும் அக்டோபர்-2ஆம் தேதி இந்தபடம் ரிலீசாகிறது.
Comments are closed.