நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு மூலம் நாகப்பட்டினத்தில் உள்ள கிராமப்புறப் பெண்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பஜாஜ் ஃபைனான்ஸ்!
நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு மூலம் நாகப்பட்டினத்தில் உள்ள கிராமப்புறப் பெண்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பஜாஜ் ஃபைனான்ஸ்!
● இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் வங்கிச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தாத பகுதிகளில் நிதிச் சேர்க்கையை மேம்படுத்தும் அகில இந்தியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ‘அர்தசூத்ரா சம்வாத்’ நிதி விழிப்புணர்வு இயக்கம் நாகப்பட்டினத்தின் கிராமப்புறங்களைச் சென்றடைந்துள்ளது.
● நாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிதிக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், நிதி மோசடிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பணத்தை நிர்வகிப்பதற்கான சிறந்த முறைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நாகப்பட்டினம், தமிழ்நாடு, அக்டோபர் 12, 2026: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) பஜாஜ் ஃபின்சர்வைச் சேர்ந்த ‘பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்’, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் மீனவர் காலனி மற்றும் ஒரத்தூர் கிராமத்தில் ‘அர்தசூத்ரா சம்வாத்’ என்ற நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் வங்கிச் சேவை குறைவாக உள்ள பகுதிகளில் நிதிச் சேர்க்கையை மேம்படுத்தும் பஜாஜ் ஃபைனான்ஸின் தேசிய அளவிலான திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதி விழிப்புணர்வு வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதிக் கட்டுப்பாடு, பொறுப்பான பண மேலாண்மை, பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் நிதி மோசடிகளிலிருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, சேமிப்பின் முக்கியத்துவம், குடும்ப வரவு-செலவுத் திட்டம், பொறுப்பான முறையில் கடன் பெறுதல், கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நிதி நடைமுறைகள் குறித்து கிராம மக்களுக்கு, குறிப்பாய் பெண்களுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். மேலும் இணையவழி மோசடிகள், போலியான முதலீட்டு திட்டங்கள், சந்தேகத்திற்கிடமான லிங்க்குகள், APK கோப்புகள், வாட்ஸ்அப் மோசடிகள் மற்றும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனப்படும் இணையவழி மிரட்டல் மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இணைய மோசடிக்கு ஆளானால் உடனடியாக தேசிய இணையக் குற்ற உதவி எண்ணான 1930-ஐ அழைத்து புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஒரத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. பாத்தியா ஆரோக்கிய மேரி, கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பேபி மற்றும் SOS குழந்தைகள் கிராம அமைப்பின் உதவி இயக்குநர் திருமதி. ராஜலக்ஷ்மி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 75 பெண்கள் பங்கேற்றனர்.
காமேஸ்வரம் மீனவர் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) திரு. முருகப்பா, கிராம ஊராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
காமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) முருகப்பா, இணையவழி மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினார். “ஒவ்வொருவரும் சைபர் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டால், உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளியுங்கள்” என்று அவர் கூறினார்.
ஒரத்தூர் கிராம மக்களிடையே உரையாற்றிய ஆய்வாளர் திருமதி பேபி, “பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தவொரு வங்கி ஊழியரும் உங்களிடம் OTP, கார்டு விவரங்கள் அல்லது வங்கி கணக்கு தகவல்களைக் கேட்கவே மாட்டார்கள்” என்றார். அங்குள்ள பெண்களிடம் பேசிய அவர் “நீங்கள் அனைவரும் *வீர மங்கைகள்* (தைரியமான பெண்கள்) எனவே இதுபோன்ற மோசடிகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருங்கள். ஏதேனும் ஏமாற்றம் நடந்தால் பயப்பட வேண்டாம். உடனடியாக காவல் துறை, சைபர் கிரைம் பிரிவு மற்றும் உங்கள் வங்கியிடம் புகார் அளியுங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் பணத்தை மீட்க உதவுவோம்” என்று கூறினார்.
நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திருமதி. பாத்தியா ஆரோக்கிய மேரி, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜ்னா (செல்வ மகள் திட்டம்) போன்ற அரசுத் திட்டங்களைப் பற்றி விளக்கினார். சேமிப்பு மற்றும் காப்பீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், கிராம மக்கள் எவ்வாறு இத்திட்டங்களைப் பயன்படுத்திப் பலன் பெறலாம் என்பதையும் விளக்கிப் பேசினார்.
SOS அறக்கட்டளையைச் சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி, பஜாஜ் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். சேமிப்பு, குடும்ப வரவு-செலவுத் திட்டம் மற்றும் பல்வேறு நிதி சார்ந்த விஷயங்களை மக்கள் இத்திகழ்ச்சியின் மூலம் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், பெண்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “பெண்களின் சுதந்திரத்திற்குக் கல்வியே அடிப்படை” என்று குறிப்பிட்ட அவர், “பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான தைரியத்தையும் திறனையும் நாம் வழங்க வேண்டும், அதற்குக்கல்வி மிகவும் அவசியமானது” என்றார்.
நிதித் திட்டமிடல், பொறுப்பான முறையில் கடன் பெறுதல், சேமிப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு முறைகள் போன்ற முக்கிய அம்சங்கள் மீது இக்கூட்டம் கவனம் செலுத்தியது. காமேஸ்வரம் மற்றும் ஒரத்தூர் ஆகிய இரண்டு ஊர்களிலும் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிதி நல்வாழ்வு மற்றும் சைபர் மோசடிகளில் இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் குறித்து அவர்கள் விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
Comments are closed.