‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ ஆந்தம் உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

206

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்சின் மூன்றாவது கட்டத்தில் கடைசிப் படமாக வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’.

சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம், ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக, தமிழ், தெலுங்கு, இந்தி என மாநில மொழிகளில் வெளியாகும் பதிப்புகளும் தனி கவனம் ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்து வருகிறது டிஸ்னி-மார்வல் நிறுவனம்.

முன்னதாக, ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ தமிழ் டப்பிங் வடிவத்துக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் ஒரு பகுதியாக, சர்வதேச நட்சத்திரமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக தனியாக ஒரு பாடலை உருவாக்கவுள்ளார். இதற்கு மார்வெல் ஆந்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இது மூன்று மொழிகளிலும் தயாராகிறது. ஏப்ரல் 1-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என்று தெரிகிறது.

Comments are closed.