ப்ரியா அட்லிக்கு கிடைத்த ‘கபாலி’ தரிசனம்…!

177

atlee priya - rajini
ஒவ்வொரு ஆணும் தனது காதல் மனைவிக்கு அவர்களின் பிறந்தநாளின்போது தங்கநகை, பட்டுச்சேலை என விதவிதமான கிப்ட் கொடுத்து அசத்துவார்கள். இன்னும் சிலர் ரொமான்டிக்காக ஏதாவது முயற்சி செய்து கவனம் ஈர்ப்பார்கள்.. ஆனால் இயக்குனர் அட்லி தனது மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் பரிசாக வழங்கியது, உண்மையிலேயே ப்ரியாவுக்கு இதுவரை கிடைத்திராத பரிசாகத்தான் அமைந்திருக்கிறது.

அப்படி என்ன செய்தார் அட்லி..? ப்ரியாவின் பிறந்தநாள் அன்று வழக்கம்போல அவரை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பியவர், திடீரென சென்னையில் நடைபெற்றுவரும் ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.. இங்கே எதற்கு என குழம்பியபடியே இறங்கியுள்ளார் ப்ரியா. ஆனால் உள்ளே சென்றதும் அவர்கள் இருவரையும் நெறி வந்து வரவேற்றது சாட்சாத் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியே தான்.

இன்ப அதிர்ச்சியில் பேச்சு வராமல் திகைத்த ப்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய ரஜினி, அவர்களுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியாக உரையாடினாராம். தீவிர ரஜினி ரசிகையான பிரியாவுக்கு அவரது பிறந்தநாளன்று இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கவேண்டும் என்பதற்காக, அட்லி ரஜினியிடம் முன்கூட்டியே கோரிக்கை வைக்க, சூப்பர்ஸ்டாரும் டபுள் ஒகே சொல்லிவிட்டாராம். இதைவிட ப்ரியாவுக்கு இன்னொரு சிறந்த கிப்ட் கிடைத்துவிடுமா என்ன..?

Comments are closed.