த்ரில்லிங் அனுபவத்தை தரப்போகும் ‘அதே கண்கள்’..!

358

athe kankal

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து கலையரசன் நாயகனாக நடித்த படத்தை சி.வி.குமார் தயாரித்து வந்தார். ஜனனி ஐயர், ஷிவதா நாயர், பால சரவணன் ஆகியோர் நடித்து வந்த இப்படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் விஷ்ணுவர்தனிடம் வித்தை கற்றவர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வித்தியாசமான படங்களை தருவதற்கு பெயர்போன சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

கதாநாயகிகளாக ஜனனி, ஷிவதா இருவரும் நடித்துள்ளனர். காமெடிக்கு பாலசரவணன் இருக்கிறார். வரும் ஜன-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே த்ரில்லிங் மற்றும் ட்விஸ்ட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதும ரசிகர்களுக்கு சரியான தீனி காத்திருக்கிறது என்பதும் நன்றாகவே தெரிகிறது.

Comments are closed.