“போதைக்கு எதிரான படத்தை தான் தயாரித்துள்ளேன்” ; அதர்வா

244

atharva

நடிப்புடன் சேர்த்து தயாரிப்பிலும் இறங்கிய அதர்வா,தனது கிக்காஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் முதன்முதலாக தயாரித்துள்ள படம் செம போத ஆகாதே..அதர்வா நடித்த முதல் படமான பாணா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், தற்போது இயக்கியுள்ள இந்த படம் ஜூன் 29-ந்தேதி திரைக்கு வருகிறது. அதர்வாவுடன் மிஸ்தி, அனைகா சோட்டி, கருணாகரன், மனோபாலா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

“இதற்கு முன்பு படம் தயாரித்தவர்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதை கேட்டிருக்கிறேன். அந்த கஷ்டங்களை இப்போது நான் படம் தயாரித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது சாதாரண விசயமல்ல” என சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதர்வா கூறினார்.

மேலும்,”படத்தின் தலைப்பு செம போத ஆகாதே என்று இருப்பதால் இது போதை சம்பந்தப்பட்ட படம் என்று நினைக்கிறார்கள். இது போதைக்கு எதிரான படம். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சொல்லும் படம். செம போதயில் இருக்கும் ஒருவன் எந்தமாதிரியான பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறான். அதன் பின்விளைவுகள் அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை சொல்லும் படம்.அந்த வகையில், சமூகத்துக்கு இது நல்லதொரு மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும். சீன் பை சீன் சிரித்து மகிழக்கூடிய வகையில், பக்கா கமர்சியலாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். இந்த படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் பெரிய இயக்குனராகி விடுவார்” என்றார் அதர்வா.

Comments are closed.