தெகிடி படத்தில் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், இன்னும் வலுவான ஒரு பிரேக்கிற்காக காத்துக்கொண்டிருக்கும் அசோக் செல்வனுக்கு, தற்போது அப்படி ஒரு படமாக அமைந்திருக்கிறது கூட்டத்தில் ஒருவன்.. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் விகடன் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. இந்தப்படத்தின் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிவகுமார், சூர்யா, நாசர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.. சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் துவனாக் காரணமாக இருந்தவரும், அதற்கு அகரம் என பெயர் வைத்தவரும் இந்த ஞானவேல் தான்.. சிவகுமார் குடும்பத்தில் ஒருத்தராகவே கருதப்படும் இவர் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதையை உருவாக்குவதற்கு காரணமே கார்த்திதானாம்.. அந்த காரணத்தை இந்த விழா மேடையில் குறிப்பிட்டு கலகலப்பாக்கினார் ஞானவேல்..
“நிஜமாக சொன்னால் இந்த கதை உருவாக காரணமாக இருந்தவர் நடிகர் கார்த்தி தான். நிஜத்தில் அவர் தான் இப்படத்தின் கதாநாயகன்! அவர் வீட்டுக்கு சென்று ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது, அண்ணன் மூத்தவராக பிறந்ததால் வீட்டில் அவர் எல்லாருக்கும் செல்லம். அதைப் போல தான் கடைசியாக பிறந்த சகோதரிக்கும்.. ஆனால் நடுவில் பிறந்த எனக்கு தான் ஒன்றும் இல்லை! அவர் இப்படி சொன்ன அந்த வார்த்தையிலிருந்து உதித்த கருவை வைத்து உருவாக்கியது தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை.

Comments are closed.