சோலோ ஹீரோவாக, நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தும் கூட சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறிவந்த விக்ராந்திற்கு சுசீந்திரனின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த ‘பாண்டியநாடு’ படம் ஆறுதல் தந்தது. அந்தப்படத்தில் விக்ராந்தின் கேரக்டரும் நடிப்பும் பேசப்பட்டது. அந்தப்படத்தில் விக்ராந்த் நடிக்க விஷால் தான் முக்கிய காரணம்.
தற்போது தனது சகோதரர் சஞ்சீவ் இயக்கத்தில் ‘தாக்க தாக்க’ என்கிற படத்தில் நடித்துவரும் விக்ராந்த்துக்கு, இந்தப்படத்தில் ஏதோ ஒருவகையில் விஷால் வந்துபோனால் நன்றாக இருக்குமே என நினைத்தவர் ஒரு எஸ்.எம்.எஸ் தட்டினார்..
விஷாலுக்கு மட்டுமல்ல, ஆர்யா, விஷ்ணுவுக்கும் சேர்த்தே.. உடனே எந்த மறுபேச்சும் இல்லாமல் பின்னி மில்லில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின் புரோமோ பாடல் காட்சியில் வந்து ஆடிக்கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள் இந்த மூவரும். முக்கியமான செய்தி, இந்தப்படத்தை கலைப்புலி தாணு வாங்கியுள்ளார் என்பதுதான்.
Comments are closed.