டைரக்டரானார் ஆர்யா..! மகிழ்ச்சியில் ‘உருமி’ டீம்..!

223

 

தன்னை ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் ஆர்யா.. ஏற்கனவே மூன்று படங்களை தயாரித்த ஆர்யா, தற்போது ராஜேஸ் இயக்கத்தில் தான் நடித்துவரும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்கிற படத்தையும்  தயாரித்து வருகிறார்.

இப்போது லேட்டஸ்டாக ‘ஆகஸ்ட் சினிமா’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் நான்காவது டைரக்டராகவும் இணைந்திருக்கிறார். இந்த நிறுவனம் தான் ஆர்யா மலையாளத்தில் நடித்த, ‘உருமி’ படத்தை தயாரித்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஷாஜி நடேசன், ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் சந்தோஷ் சிவன், இதில் நடித்த பிருத்விராஜ் மூவரும் சேர்ந்து துவங்கிய இந்த கம்பெனியில் தற்போது ஆர்யாவும் இணைந்துள்ளது குறித்து ‘உருமி’ டீம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

Comments are closed.