ஏழு வில்லன்களுடன் மோதுகிறார் ஆர்யா..!

106


‘தடையற தாக்க’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து ‘மீகாமன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. இந்தப்படத்தில் ஒன்று..இரண்டல்ல.. ஏழு வில்லன்களுடன் மோதுகிறார் ஆர்யா.

ஆசிஷ் வித்யார்த்தி, அவினாஷ்(சிறுத்தை), மகா காந்தி(தடையற தாக்க), அஷுதோஷ் ராணா(வேட்டை), சுந்தன்ஷு பாண்டே(பில்லா-2), ஹரிஷ்(பாண்டியநாடு) மற்றும் மகாதேவன்(பிதாமகன்) ஆகியோர் தான் அந்த ஏழு பேர்.

‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

குறுகியகால தயாரிப்பாக உருவாகிவரும் இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் படம் ஜூலை இறுதியில் திரைக்கு வரும் என தெரிகிறது.

Comments are closed.