‘ரம்’ படத்துக்காக அம்பத்தூரில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட பங்களா..!

199

rum

புதுமுக இயக்குனர் சாய்பரத் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் தான் ‘ரம்’.. தனுஹுடன் வேலையில்லா பட்ட்டதாரி படத்தில் நடித்த ஹரிஷிகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க நரேன்-மியா இருவரும் கதையின் நாயக, நாயகியராக நடிக்கின்றனர்..மற்றும் விவேக், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் இந்தப்படத்தில் உண்டு.

இந்தப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்க, சேனையில் மிக பிரமாண்டமான பங்களா ஒன்றை தேடினார்களாம். ஆனால் நினைத்தபடி ஒரு பங்களா கூட கிடைகவில்லையாம். உடனே அம்பத்தூரில் மிகப்பெரிய காளி நிலத்தை பிடித்து மிகப்பிரமாண்டமான பங்களாவை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தினார்களாம். படப்பிடிப்புக்கு வந்த நட்சத்திரங்களின் ஆச்சர்யம் அடங்குவதற்கே வெகு நேரம் பிடித்ததாம். மற்ற திகில் படங்களில் இருந்து முற்றிலும் வித்யாசமாக, மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் இயக்குனர் சாய்பரத்.

Comments are closed.