
ஆரம்பத்தில் கலைஞரின் பேரனாக அறியப்பட்டாலும் ‘வம்சம்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, இன்று தமிழ்சினிமாவில் ஒரு நடிகராக தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார் நடிகர் அருள்நிதி. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் அருள்நிதிக்கு திருமண யோகம் கூடி வந்துள்ளது. ஹைகோர்ட் முன்னாள் நீதிபதியின் மகள் கீர்த்தனாவை மணம் முடிக்க இருக்கிறார் அருள்நிதி.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் திங்கட்கிழமை நடைபெற்றது. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் ஜூன் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. காரணம் அருள்நிதி தற்போது படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அவற்றில் இருந்து கொஞ்சம் ப்ரீ ஆனதும் திருமணத்தை நடத்துவதற்காகத்தான் ஜூன் மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.
Comments are closed.