‘ஈரம்’ அறிவழகன் படத்தில் நடிக்கும் அருள்நிதி..!

230

‘ஈரம்’ என்கிற ஆல் டைம் ஹிட்டுக்கு சொந்தக்காரர் இயக்குனர் அறிவழகன். இரண்டாவதாக இயக்கிய ‘வல்லினம்’, அவரது பெயர் சொல்லும்படி வெற்றியை பெறவில்லை. அதனால் மூன்றாவதாக ரசிகர்களை கவரும் விதமாக, த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையை கையில் எடுத்துள்ளார். இது மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘மெமோரீஸ்’ படத்தின் ரீமேக் தான்.

ஹீரோவாக அருள்நிதி நடிக்கிறார்.. இந்தப்படத்தில் இவருக்கு போலீஸ் அதிகாரி வேடம்.. தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரன் ஒருவனை கண்டுபிடித்து தனது தம்பியை காப்பற்றும் போலீஸ் அதிகாரியின் கதை என்பதால், இந்தப்படத்தில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமிருக்காது. இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Comments are closed.