சசி இயக்கத்தில் பரத் நடித்த ‘555’ படம் வெற்றிகரமாக 50 நாட்கள் ஓடியது. ஆனாலும் தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுக்க நிதானமும் மிகுந்த கவனமும் காட்டிவந்தார் பரத். அதற்கேற்ற மாதிரி இப்போது வித்தியாசமான டைட்டிலுடன் அருமையான கதை ஒன்று அவரிடம் சிக்கியுள்ளது.
படத்தின் பெயர் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. எப்பா டைட்டில் எவ்வளவு நீளம்..? டைட்டிலை பார்த்த்துமே லாட்ஜில் ரூம் போட்டு ஊர் ஊராக சுற்றிவரும் டாக்டர்களின் ஞாபகம் வந்திருக்குமே.. இந்தப்படத்தை புதுமுகம் எல்.ஜி.ரவிச்சந்தர் என்பவர் இயக்குகிறார்.
பரத்திற்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதா நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ‘சூதுகவ்வும்’ கருணா, மனோபாலா உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்,. யுகபாரதி மற்றும் கானா பாலாவின் பாடல்களுக்கு சைமன் என்பவர் இசையமைக்கிறார்.
Comments are closed.