ஆக்சன் பேக்கிங்காக உருவாகியுள்ள ‘அண்ணாதுரை’..!

246

annadurai 1

புதியவரான ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் தான் ‘அண்ணாதுரை’.. இந்தப்படத்தில் டயானா, மகிமா கதாநாயகிகளாக நடிக்க, ராதாரவி, ராதிகா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியுடன் இணைந்து ராதிகா இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.. விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை விட ஒருபடி சற்று கூடுதலாகவே ஆக்சன் பேக்கிங்காக இந்தப்படம் உருவாகியுள்ளது நன்றாகவே தெரிகிறது. இந்தப்படத்தில் எடிட்டராக கூடுதல் புரமோஷனும் பெற்றுள்ளார் விஜய் ஆண்டனி.

Comments are closed.