
தமிழில் மு.களஞ்சியம் இயக்கிய ‘ஊர்சுற்றி புராணம்’ படத்தில் 25 நாட்கள் மட்டுமே நடித்த அஞ்சலி இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்னையால் அந்தப்படத்தில் நடிக்காமல் சில் மாதங்கள் மாயமானார். அதன்பின் சங்கங்கள் மூலமாக இயக்குனர் களஞ்சியம் முறையிட்டும் அவரிடமிருந்து பதில் இல்லை. ஆனால் தமிழில் நான் படங்களில் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என களஞ்சியத்துக்கு சவால் அறிக்கை விட்டார்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம்(கில்டு) மூலமாக நான்கு மாநில தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் அஞ்சலியை படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யகூடாது என தடை விதிக்க்கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஞ்சலி ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தெலுங்கு பிரபலங்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடிப்பாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதில் அவர் தெலுங்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படத்தின் தயாரிப்பாளரும் அடக்கம். தெலுங்கு தயாரிப்பாளர்கள் அஞ்சலியின் சார்பாக இருக்கும்போது தமிழில் என்னவிதமான முடிவெடுப்பார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.
ஆனால் அஞ்சலியின் இந்த செயல் ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த சம்பவத்தை தான் ஞாபகப்படுத்துகிறது. அஞ்சலி களஞ்சியத்தின் படத்தில் நடித்துக்கொடுப்பது ஒன்றே அவர் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிகளிலும் தடையில்லாத பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.
Comments are closed.