திமிரு’ என்கிற ஒரே படத்தின் மூலம் தனது மிரட்டல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா ரெட்டி. தற்போது ‘அண்டாவ காணோம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். விஜய்சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் (அன்டாவுக்காக குரல் கொடுத்திருப்பவர் அவர்தானே) இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகனாக நடிப்பவர் விஜய் டிவி புகழ் தீபக். கிராமத்தில் சின்ன பொருள் ஒன்று காணாமல் போனாலே அமர்க்களப்படும்.. ஒரு அண்டா காணாமல் போனால் அலறாதா பின்னே.. இதைவைத்துத்தான் இரண்டு மணிநேர கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வடிவேல். இந்தப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.
“9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங்க்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது என்றார் நாயகி ஸ்ரேயா ரெட்டி.

Comments are closed.