‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலின் ராசியான ஜோடியான லட்சுமி மேனன் தான் இந்தப்படத்திலும் கதாநாயகி. இனியா இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், சுந்தர் ராமு, ஜெகன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சமர்’ என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான ‘திரு’ தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து, 2014 ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.