பரபரப்பை ஏற்படுத்திய விஷாலின் ‘அயோக்யா’ பர்ஸ்ட் லுக்

தற்போது விஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத், விசாகபட்டினம் தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது . இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால்.

தெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பூஜா தேவரையா, வம்சி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சாம் CS இசையமைக்கும் இந்தப்படத்திற்கு தெலுங்கு கதாசிரியர் வக்கந்தம் வம்சி மூலக்கதை எழுதியுள்ளார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் B.மது தயாரிக்கும் இந்தப்படம் ஜனவரி 2019-ல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

B.மதுஅயோக்யாகே.எஸ்.ரவிக்குமார்சச்சுசாம் CSசென்னைபார்த்திபன்ராஷி கன்னாலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்வக்கந்தம் வம்சிவம்சிவிசாகபட்டினம்வெங்கட் மோகன்ஹைதராபாத்