காதல் ஏற்றுக்கொள்ளப்படாமல் வருத்தத்தில் இருக்கும் விஷாலுக்கு விக்ராந்த்தும் சூரியும் காதலே வேண்டாம் என்று அறிவுரை சொல்லிப் பாடுவது போலவும் அதேபாடலின் பாதியில் விஷாலுக்கு, லட்சுமிமேனன் செல்போனில் தன் காதலைச் சொல்ல, உடனே விஷால் ஜாலி மூடிற்கு மாறி சந்தோஷமாக ஆடுவது போலவும் இந்தப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்தப்பாடலில் காதல் தோல்வி மற்றும் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தோசம் என இருவேறு உணர்ச்சிகளை பிரதிபலித்திருக்கும் விஷால் “உண்மையிலே இந்தப்பாடல் சவாலாக இருந்தது” என்கிறார். இந்தப்பாடலுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.