எத்தனை தடவை அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல படுத்து எந்திரிச்சு வந்தாலும் ரிஸ்க் எடுக்கிறதை மட்டும் விடவே மாட்டேன் என்கிறார் விக்ரம். இப்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்துல ஒரு சண்டைக்காட்சிக்காக 80 அடி உயரத்துல இருந்து குதிச்சிருக்கார் விக்ரம்.
படம் ட்ராவல் சப்ஜெக்ட் அப்படிங்கிறதால சண்டைக்காட்சிகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாங்க.. இந்த படத்துல சண்டை பயிற்சியாளரா பணிபுரிகிற லீ விட்டேகர் விக்ரமோட ரிஸ்க்கை பார்த்து பிரமிச்சுப்பாய் சமீபத்தில ஒரு பேட்டியில் கூட இது பற்றி சிலாகித்து சொல்லியிருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் இந்தப்படத்துல விக்ரம் ஜோடியா சமந்தா நடிக்கிறாங்க.. அதுவும் ஒன்னு இல்ல. ரெண்டு வேடத்துல.. பசுபதியும் ஜாக்கி ஷெராப்பும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.