விஜய்க்கு வில்லனாக திருட்டுப்பயல் டேவிட்..!


நீல் நிதின் முகேஷ்.. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் இன்று பாலிவுட்டில் இளம் முன்னணி நடிகர். இன்னும் இவரை அடையாளப்படுத்தும் விதமாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் சுசி.கணேசன் தனது ‘திருட்டுப்பயலே’ படத்தை இந்தியில் ‘ஷார்ட்கட் ரோமியோ’வாக இயக்கியபோது அதில் ஜீவன் கேரக்டரில் நடித்தவர் இவர்தான். அதேபோல ‘டேவிட்’ படத்தில் தமிழில் ஜீவா நடித்த கேரக்டரை இந்தியில் நடித்ததும் இவர்.

இவர்தான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. காரணம் சமீபத்தில் தான் சென்னை வந்த நீல் நிதின் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்து சென்றிருக்கிறார்.

முருகதாஸின் படங்களில் ஹீரோவுக்கு சமமாக வில்லனுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்பதாலும் தமிழிலும் இதன்மூலம் பிரபலம் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் தான் ஹீரோவாக நடித்துவரும் நீல் நிதின் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

3G7 Khoon MaufA R murugadossAnirudhDavidJailNeil Nitin MukeshSamanthaShort Cut RomeoThuppakiVijay
Comments (1)
Add Comment
  • essentials

    547828 637554I feel 1 of your advertisements triggered my internet browser to resize, you may want to put that on your blacklist. 395749