தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக இருக்கிறார் .அவர் பெயர் சபிஜே.
இவர் சர்வதேச மாடலான இவர் தமிழ்ப் பெண்தான். ஆம்.. இவருக்கு பூர்வீகம் ஸ்ரீலங்கா. நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருப்பவர். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், நான் செமிபைனல் வரை அதாவது அரையிறுதி வரை சென்று வந்தவர்.
நடிகர்களில் எவர்க்ரீன் ரஜினி, சிம்பிள் விஜய், ஹார்டு ஒர்க்கர் விஜய் சேதுபதி பிடிக்கும் என்பவர் “இங்குள்ள எல்லா நடிகர்களின் படங்களும் பார்ப்பேன். குறிப்பாக விஜய் பிடிக்கும். அதேபோல சினிமாவில் போராடி ஜெயித்த விஜய்சேதுபதியும் பிடிக்கும் ஒரு நாள் விஜய்யை ‘பைரவா’ படப்பிடிப்பில் சந்தித்தேன். அவ்வளவு எளிமையாக இருந்தார் .ஆச்சரியப் பட்டேன்.அதுவரை அவரது சாதாரண ரசிகையாக இருந்த நான், அவரைச் சந்தித்த பின்னால் பரம ரசிகையாக மாறிவிட்டேன்” என்கிறார்.. ‘
றெக்க’ படப்பிடிப்புக்கு ஒரு நாள் போனேன். நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொண்டேன். அதைப் பார்த்த அந்தப் படத்தின் கேமராமேன் தினேஷ், தான் பணியாற்றும் அடுத்த படத்துக்கு என்னைப் பரிந்துரை செய்து இருக்கிறார் அப்படி வந்த வாய்ப்புதான் இயக்குநர் எம்.ஏ.பாலாவின் ‘காதல் நகரம்’ படம். படப்பிடிப்பு பார்க்க வந்தேன் இப்படி ஒரு பட வாய்ப்பே கிடைத்து விட்டது. அதில் எனக்குப் பெயர் சொல்லும் படியான அறிமுகம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்கிறார் சபிஜே.