தெறி’ படத்தை தொடர்ந்து அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார் விஜய். இது அவரின் 60வது படம்… விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு நாயகியாக மலையாள நடிகை அபர்ணா வினோத் நடிக்கிறார். விஜய்யுடன் இரண்டாவது முறையாக காமெடியானாக சதீஷ் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதை முடித்துவிட்டு தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்றுமுதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்கியுள்ளது. இரண்டாவது கதாநாயகியான அபர்ணா வினோத் நேற்றுமுதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.