‘வடகறி’க்கு ‘U’ சான்றிதழ்.. ஜூன்-12ல் ரிலீஸ்..?

தற்போது ‘வடகறி’ படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்கியுள்ளார்.
சுப்பிரமணியபுரம்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய், சுவாதி மீண்டும் இணைந்து நடிப்பது ஒருபக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் மும்பை கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கைகுழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் ஜூன்-12ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

‘வடகறி’க்கு ‘U’ சான்றிதழ்.. ஜூன்-12ல் ரிலீஸ்..?actor jaiActress Swathi