இதே தயாரிப்பாளரின் இன்னொரு தயாரிப்புதான் ராம்சரண் நடித்துள்ள ‘எவடு’ திரைப்படம். இந்தப்படத்திலும் ஸ்ருதிஹாசன் தான் கதாநாயகி. கூடவே எமி ஜாக்சனும் இருக்கிறார். முக்கியமான வேடத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜூன். இந்தப்படம் தயாராகி வெகு நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் தற்போது ராம்சரண் நடித்துள்ள ஜஞ்சீர்(தூபான்) ரிலீஸாகி ஓடிக்கொண்டிருப்பதால் முதலில் ஜூனியர் என்.டி.ஆர் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர் தில் ராஜூ.