கும்பகோணத்தில் நயன்தாராவுடன் ‘திருநாள்’ கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஜீவா..!

2௦௦6ல் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘ஈ’ படத்தை தொடர்ந்து தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து ‘திருநாள்’ என்கிற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. பி.எஸ்.ராம்நாத் என்பவர் இயக்கும் இந்தப்படம், ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ மாதிரி பக்கா காமெடி சப்ஜெக்ட்டாம்.

இந்தப்படத்தின் கதையை கேட்ட மாத்திரத்திலேயே, தனது பிசியான ஷெட்யூலிலும் தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளார் நயன்தாரா. முதலில் டிசம்பரில் தொடங்கப்படலாம் என்றிருந்த நிலையில் தற்போது மேமாதமே இதன் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. இதற்கென கும்பகோணத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.

எஸ் பி ஜனநாதன்சிவா மனசுல சக்திதிருநாள்