‘ராணிப்பேட்டையில் இருக்கும் ஹீரோவுக்கும், காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஹீரோயினுக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு இடையேயுள்ள தூரம் 50 கி.மீ. இவர்கள் காதலுக்கு சிலரால் பிரச்னை ஏற்படுகிறது. அதை அவர்கள் எப்படி வெல்கிறார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் ராஜேஷ், கலை அனாமிகா, மகேந்திரன், யோகி ராம் உட்பட பலர் நடிக்கின்றனர்.