சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜை க்ளைமாக்ஸில் அடித்து துவைக்கும் சூர்யா, இறுதியாக ‘நல்லூரில் ஆரம்பிச்சது.. நெல்லூரில் முடியட்டும்’ என சொல்லிவிட்டு அவரை சுட்டுத்தள்ளுவார். ஆனால் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போது கூட நெல்லூரில் ரியாஸ்கானுடன் ஆவேசமாக மோதிக்கொண்டுதான் இருக்கிறார் ‘மாஸ்’ படத்திற்காக.
வெங்கட் பிரபு டைரக்சனில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் சண்டைக்காட்சியைத்தான் தற்போது நெல்லூரில் உள்ள கிருஷ்ண பட்டிணம் துறைமுகத்தில் படமாக்கி வருகிறார்கள். பத்துநாட்களில் படமாக்க திட்டமிடப்பட்டு, நடைபெற்றுவரும் இந்த சண்டைக்காட்சியில் ரியாஸ்கான் தவிர, பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோரும் பங்கு பெற்றுள்ளனராம்.
மூன்றாவது முறையாக இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தவிர ‘சகுனி’ பிரணிதாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். கிட்டத்தட்ட படத்தை நெருக்கி முடித்துவிட்ட வெங்கட்பிரபு இன்னொரு பக்கம் போஸ்ட் புரடக்சன் வேலையையும் முடுக்கிவிட்டுள்ளார்.