சுக்கிரதிசையில் சூர்யாவின் ‘2டி’ நிறுவனம்..!

 

அனைத்து மொழிகளிலும் ரீமேக்காகும் தகுதியுடைய படம் எப்போதாவதுதான் வருகிறது.. அதிலும் பெரும்பாலானவை மலையாள திரையுலகில் இருந்தே வருகின்றன.. அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நான்கு வருடங்களுக்கு முன் பாடிகார்டு.. கடந்த வருட உதாரணமாக த்ரிஷ்யம்.. இப்போது லேட்டஸ்ட் உதாரணமாக ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என மூன்று படங்களை சொன்னாலே போதும்..

தற்போது ஜோதிகா தமிழில் நடித்து வரும் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ பட ரீமேக்கின் படப்பிடிப்பு ஏறக்குறைய இன்னும் மூன்று தினங்களில் முடிவடைந்துவிடும் என தெரிகிறது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மலையாள ஒரிஜினலை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழிலும் இயக்குகிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையையும் சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தான் கைவசம் வைத்துள்ளது. இதனால் தெலுங்கு, இந்தி படவுலகில் இருந்து இதன் ரைட்ஸை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்குவதற்கு கூட, தயாரிப்பாளர்கள் முண்டியடித்து வருகின்றனர்.

மேலும் அந்தந்த இண்டஸ்ட்ரியில் உள்ள முன்னணி நடிகைகளில் பலர் இந்தப்படத்தின் ரீமேக்கில் மஞ்சுவாரியர், ஜோதிகா வரிசையில் தாங்களும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்களாம். தனது முதல் தயாரிப்பிலேயே வலுவான கதை மற்றும் அதன் ரீமேக் ரைட்ஸ் என பக்காவான ஸ்கெட்ச்சுடன் களம் இறங்கியுள்ள சூர்யாவின் ‘2டி’ நிறுவனத்திற்கு ஆரம்பமே சுக்கிரதிசை தான் என்பதில் சந்தேகமில்லை..

2டி நிறுவனம்..!சூர்யாஜோதிகாத்ரிஷ்யம்மஞ்சுவாரியர்ரோஷன் ஆண்ட்ரூசேஹவ் ஓல்டு ஆர் யூ