வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ எனற பெயரில் ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து இப்போது ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாக்கி வருகிறது. இதில் ஜெய்நாத் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், இமான்அண்ணாச்சி, ராதா, சிங்கம் புலி, ரவிமரியா, நான்கடவுள் ராஜேந்திரன், முத்துக்காளை உட்பட பலர் நடிக்கிறார்கள். நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார். இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி.
இப்படத்திற்காக சமீபத்தில் திருக்கோடியூர் என்ற கிராமத்தில் கோயில் திருவிழா பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அந்த பாடல் காட்சிக்காக மும்பையிலிருந்து வைபவி என்ற நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால் அவரோ எனக்கு ஈடுகொடுத்து ஆடக்கூடிய நடிகருடன் தான் நடிப்பேன் என்று சொன்னாராம்.
ஆனால் கதாநாயகன் ஜெய்நாத்துடன் ஆடி முடித்த பிறகு நானே எதிர்பார்க்க வில்லை சூப்பராக ஆடி இருக்கே என்று அவரை பாராட்டினாராம் வைபவி. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பாடல்காட்சி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தலைமையில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஸ்ரீகாந்த் தேவாவும் சேர்ந்து இந்த குத்துப்பாட்டுக்கு நடனமாடி இருக்கிறாராம்.