’எக்ஸாம்’ இணையத் தொடரில் செழியனாக கலக்கியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!

வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை பாணியிலான கதாபாத்திரங்கள் என எந்தவிதமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொறுந்தக்கூடிய நடிகர்களில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கியமானவர். ’தப்பாட்டம்’ படத்தில் நாயகனாக அறிமுகமான இவர், ‘களவாணி 2’ படத்தில் வில்லனாகவும், நாயகியின் தந்தையாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘டேனி’, விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’, அதர்வா முரளியின் ’பட்டத்து அரசன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டு பெற்று வருகிறார்.

மேலும், ’தப்பாட்டம்’ படத்திற்காக வடிவமைக்கப்பட்ட இளநீர் குடிக்கும் போஸ்டரை, டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டத்தின் மூலம் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டார். அந்த போஸ்டரை ஏராளமானவர்கள் தற்போதும் பல மீம்ஸ்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், இதுவரை திரைப்படங்களில் கலக்கி வந்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது இணையத் தொடர் உலகில் கால் பதித்துள்ளார். இயக்குநர் சற்குணம் எழுத்து இயக்கத்தில், புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், அமேசான் ப்ரைமில் வரும் மே 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள ’எக்ஸாம்’ இணையத் தொடர் மூலம் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இணையத் தொடர் உலகில் அறிமுகமாகிறார்.

தமிழகத்தில் நடைபெற்ற மிக முக்கியமான, இதுவரை சொல்லப்படாத ஒரு பெரும் மோசடியை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ தொடரில் காவல்துறை அதிகாரியாக செழியன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாகர், தனது தனித்துவமான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, தொடரின் மிக முக்கியமான கதாபாத்திரமாக பயணித்து கவனம் ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியின் மூலம் ‘எக்ஸாம்’ தொடர் பாராட்டு பெற்றதோடு, அதில் நடித்த நடிகர்களில் துரை சுதாகரின் கதாபாத்திரம் மற்றும் நடிப்புக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொழிலதிபர், சமூக சேவகர் என பன்முகத்திறன் கொண்டவராக இருந்தாலும், திரைத்துறையில் நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க தயார், என்ற கொள்கையோடு பயணிக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘எக்ஸாம்’ தொடர் மூலம் இனி, இணையத் தொடர் உலகிலும் கலக்குவார்.

durai sudhakarexam web serieskollywood actor durai sudhakarpublic star durai sudhakarஎக்ஸம் தொடர்துரை சுதாகர்பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்