சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட நட்சத்திரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


டாக்டர் படத்தை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் டான். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்குகிறார். இவர் அட்லீயிடம் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்., அனிருத்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் இது ஏழாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்தப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் தான் இந்தப்படத்திலும் கதாநாயகியாக தொடர்கிறார். ஹிட் காம்பினேஷனான சூரி மீண்டும் சிவாவுடன் இணைகிறார். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Actor SibirajActor SivakarthikeyanAnirudhdondon tamil movieLycapriyanka mohanSamuthirakaniSJ SuryaSoori